மதுரை: மதுரையில், கி.பி., 14ம் நுாற்றாண்டில் ஆட்சி புரிந்த மாறவர்மன் குலசேகர பாண்டியன் காலத்து செப்பேடு நகல் கண்டுபிடிக்கப்பட்டது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள சக்கம்பட்டியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் தன் வீட்டில் மூதாதையர் பாதுகாத்து வந்த, இரு செப்பேடுகளில் எழுதப்பட்டுள்ள விபரங்களை அறிவதற்காக, மதுரை அரசு அருங்காட்சிய காப்பாட்சியர் பெரியசாமியை அணுகினார். தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி உதவியுடன் ஆய்வு செய்ததில், அச்செப்பேடு, 14ம் நுாற்றாண்டில் நடந்த சில சம்ப வங்கள் தொடர்பானது என தெரியவந்தது. நமது நிருபரிடம் காப்பாட்சியர் பெரியசாமி கூறியதாவது: இச்செப்பேடு, கலியுக ஆண்டு, 4443ல் அதாவது கி.பி., 1342 ம் ஆண்டு, ஆவணி மாதம், 21ம் நாள் பொறிக்கப்பட்டுள்ளது. குலசேகர பாண்டியனின், 28வது ஆட்சியாண்டில் அந்த மன்னனின் மந்திரியும், மீனாட்சி அம்மன் கோயில் தம்பிரானுமாகிய பொன்னின் தம்பிரான் என்பவர் மூலம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சில ஊர்பொதுமக்களால் இச்செப்பேடு வெளியிடப்பட்டுள்ளது. அதில், மதுரையை முஸ்லிம் மன்னர்கள் கைப்பற்றி ஆண்ட போது குலசேகர பாண்ட...