வியப்பூட்டும் வகையில் அமைந்துள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோவில்..!
முதலில் இதை தற்செயலாக தான் நாங்கள் கண்டுப்பிடித்தோம் என்பதை பதிவு செய்கிறோம்..!
கூகுள் வரைபடத்தில் நமது மீனாட்சி அம்மன் கோவில் வடக்கு திசையில் இருந்து கோணலாக தான் இருந்தது..!
போட்டோசாப் மூலம் ஒரு சிறிய சோதனை செய்து பார்த்தோம், அதில் ஒரு அளவியின் (Protractor) படத்தின் உதவியுடன் , எத்தனை டிகிரி கோணலாக இருக்கிறது என்று கண்டறியப்பட்டது..!
சரியாக 23.5° கோணலாக இருந்தது , எங்கோ இந்த 23.5° கேள்விப்பட்ட நியாபகம், பூமி 23.5 டிகிரி கோணலாக தான் சுழல்கிறது..!
இதை அன்றே என் பாண்டிய மன்னர்கள் கணித்து இருக்கிறார்கள்..!
என்ன தான் கூகுள் வரைபடத்தில் நமது மீனாட்சி அம்மன் கோவில் வடக்கு திசையில் இருந்து கோணலாக இருந்தாலும் உண்மையில்,
நமது மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்கள் அனைத்தும் எல்லா திசைகளிலும் சரியாக அமைக்கப்பட்டுள்ளது..!
Comments
Post a Comment