
பரதவரே பாண்டிய ர் என்று கல்வெட்டு ஆய்வாளர் சதாசிவ பண்டாரத்தார் கூறியிருக்கின்றார். ப ர தவரின் குல தொழிலில் மீன் பிடித்தலும் உண்டு. கொடியிலும் மீன் உண்டு. பா ண்டியரின் வாரிசுகள் கொற்கையிலேயே தங்கி வாழ்ந் துள்ளனர். கொற்கையின் பிரதானத்தொழில் முத்துக்குளித்தல். முத்துக்குளித்தல் பரதவரே செய்து வந்துள்ளனர். இன்று வரை கொற்கையை ஆண்டு வந்த பரதர் குலத்தலைவனின் பெயர் பாண்டியாபதி என்றே விளங்கி வருகிறது. மதுரையை நாயக்கர்கள் கைப்பற்றியபிறகு பரதவர்களின் தலைக்கு ஆறு பணம் தருகிறேன் என்று உத்தரவு போட்ட நாயக்கனிடம் படவா ராஸ்கல் உன்னை பிறகு கவனித்துக் கொள்கிறேன் என்று சவால் விட்ட பரதவரின் சொல் சாமானிய மக்களின் வழக்குச்சொல்லாக இன்றும் காணலாம. மதுரை மீனாட்சி பரதவரின் குல தெய்வம். மீனாட்சி அம்மன் கோவிலின் வடக்கு வாசல் பரதவர் வாயில் என்பதால் நாங்கள் கிறீஸ்தவராக மாறியபின்பு இன்றுவரை அந்த வாசல் திறக்கப்படவே இல்லை. மதுரையை மீட்ட வரலாற்றுக்கு சொந்தக்காரர் கடுங்கோன் பாண்டியன் கொற்கை இளவரசன் கொற்கையிலிருந்து படைதிரட்டிச்சென்று மதுரை வடுகரை விரட்டிய வரலாறு உண்டு...